பாதயாத்திரை என்ற பெயரை கேவலப்படுத்தியவர் அண்ணாமலை: மாணிக் தாகூர் எம்.பி பேட்டி

தஞ்சாவூர்: காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரை பாஜ அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை முன்னிறுத்தி அறிவிப்போம். இந்தியா கூட்டணி சரியான நேரத்தில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும். பிரதமர் மோடியை பொறுத்தவரை மக்களின் பிரச்னைகளில் பங்கெடுப்பது கிடையாது. வெறும் விழாக்களுக்கு மட்டும் வருகிறவர். ராகுல்காந்தி மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அந்த இடத்திற்கு ஓடோடி வருபவர்.

மோடி மணிப்பூருக்கு செல்வார் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமே.அண்ணாமலை நான்கு நாட்கள் மட்டுமே யாத்திரையை நடத்தி விட்டு தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
பாதயாத்திரை என்ற பெயரை கேவலப்படுத்தியது அண்ணாமலையே சாரும். கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீருக்கு எப்போதுமே தடையாக இருந்தது இல்லை. காவிரி மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறதோ அதை காங்கிரஸ் கட்சி செய்யும். அதனை தடை செய்வது பாஜ அரசு தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை