வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம்: ராம ஸ்ரீனிவாசனுக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் எதிர்ப்பு

சென்னை: ராம ஸ்ரீனிவாசனுக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருச்சி பா.ஜ.க. வேட்பாளராக மதுரையைச் சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசனை வேட்பாளராக அறிவிக்க திருச்சி பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் விருதுநகரில் போட்டி என கூறப்பட்ட நிலையில் திருச்சியில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே ராம ஸ்ரீனிவாசன் அண்மையில் ஜாதி சங்க மாநாடு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் அடுத்த சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் ராம ஸ்ரீனிவாசனுக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துகூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்