இனி ஒவ்வொரு தகவலாக வெளிவரும் அண்ணாமலை வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தன் மீது வழக்கு தொடர்ந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அவருக்கு நான் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. இப்போது நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை ஒவ்வொன்றாக நீதிமன்றத்தில் நிரூபிப்போம். சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடிக்கு தங்கம் பிடிபட்ட விவகாரத்தை திசைதிருப்ப நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

யாரும் அதைப் பற்றி பேச மாட்டார்கள். பயந்து விடுவார்கள் என நினைக்கிறார். குற்றவாளியுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளி வந்துள்ளதே? பாஜ தலைவர்களின் புகைப்படம் வந்ததற்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லை. இப்போது நீதிமன்றத்தில் என்ன கூறி உள்ளார் என முழுமையாக தெரியவில்லை அதன் நகல் கிடைத்தது. பார்த்துவிட்டு உரிய வகையில் வழக்கை சந்திப்பேன். அண்ணாமலை பற்றி நிறைய தகவல்கள் வெளிவரத் தொடங்கி விட்டது. நான் மட்டுமல்ல, மற்ற தலைவர்களும் இதுபற்றி பேச ஆரம்பித்து விட்டனர். இனிமேல் அண்ணாமலை பற்றி ஒவ்வொன்றாக வெளிவரும். என்னைப்போல் மற்ற தலைவர்களும் வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது