அண்ணாமலை ஐபிஎஸ் படிச்சாரா? சர்ட்டிபிகேட் வாங்கி செக் பண்ணுங்க…! திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

1.தேர்தல் பிரச்சாரத்தில் உங்களோட அதிரடி பேச்சு யாரை குறி வைத்து இருக்கும்?

என்னோட பேச்சு ஒன்றிய பாஜ அரசை நோக்கியே இருக்கும். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செய்த துரோகத்தை தோலுறிக்காமல் விடமாட்டேன். 1000, 500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து முதியவர்களை வங்கிகள் முன்பு நிற்க வைத்து சாகடித்தது, ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று சொன்னது, ஜிஎஸ்டி வரி மாநில பகிர்வில் பாரபட்சம் காட்டுவது, தமிழகத்தில் வெள்ள நிவாரணத்துக்கு காசு கொடுக்காதது, எப்படி எல்லாம் பிரதமர் மோடி தமிழகத்தை வஞ்சிக்கிறார் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். கேள்வி கேட்டா ஆண்டவனுக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிறதே அவரோட வேலையா இருக்கு. கர்நாடகாவில் ஆஞ்சநேயரை எடுத்து சுத்துனாங்க ஆட்சி போயிருச்சி, கேரளாவில் ஐயப்பனை எடுத்து சுத்துனாங்க அங்க ஒன்னும் பண்ண முடியவில்லை. இப்படி அவங்களுக்கு ஆண்டவனே துணை இல்லை, நீங்களும் அவங்களுக்கு துணை போவாதீங்கன்னும் மக்களிடம் சொல்லப் போறேன்.

2 பிரமர் மோடி மேல அப்படி என்ன கோவம் உங்களுக்கு?

முழுக்க முழுக்க எனக்கு எதிரி பிரதமர் மோடியும், ஒன்றிய பாஜ அரசும் தான். ஏன்னா.. அவரு மக்களுக்கு பண்ணிய துரோகம் அப்படி. என்னோட வடசென்னை பகுதியில் இருந்த சின்ன சின்ன கம்பெனிகள் எல்லாம் ஜிஎஸ்டியால் முற்றிலும் அழிந்து போய்விட்டது. ஜிஎஸ்டியை காங்கிரஸ் கொண்டு வந்த முறையும், அதை அமல்படுத்த நினைத்த வழியும் வேற. அதை தப்பா பயன்படுத்தி எல்லா தொழில்களையும் நசுக்கிவிட்டார். புதுசா வேலை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, இருந்த தொழிலை எல்லாம் இல்லாம பண்ணிவிட்டார் மோடி. வேலை மட்டும் இருந்திருந்தா சின்ன பசங்க யாரும் போதை பொருள் பக்கமே போயிருக்க மாட்டாங்க..

3 அண்ணாமலை தாறுமாறா திமுகவை பற்றி பேசுறாரே?

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே நான் மதிக்கவில்லை. ராத்திரி பேசுவதை காலையில் மாத்தி பேசுகிற ஒன்னா நம்பர் குடிகாரபயலுங்க மாதிரி அவர் இருக்கிறார். அதனால் தான், அவர் ஐபிஎஸ் படிச்சாரா என்று சர்டிபிகேட்டை வாங்கி செக் பண்ணுங்க என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கேள்வி கேட்டு வருகிறேன். நான் பியூசி வரை தான் படிச்சிருக்கிறேன். தப்பா பேசினால் அந்த மேடையிலே மன்னிப்பு கேட்டு வந்துவிடுவேன். கோவையில் போய் நின்று கொண்டு திமுக ஆட்சியால் 2 டிகிரி வெயில் கூடி போச்சு என்கிறார். திமுக அப்போது வேட்பு மனுவே தாக்கல் பண்ணவில்லை. அதாவது அப்போ அடுப்பை பத்த வைக்கவில்லை. அடுப்பு கொளுத்தினா எப்படி இருக்கும்னு பாருங்க. இன்னும் 2 நாளில் அவரு தொகுதிக்கு தான் பேச போறேன். எதிரியை இறங்கி அடிக்க வேண்டும்.

4 கூட்டணி இல்லை என்று அடித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி மோடியையோ, பாஜகவையோ ஏன் விமர்ச்சிக்க மறுக்கிறார்?

வெஸ்டர்ன் டாய்ெலட்டில் போய்கிட்டிருந்தவங்க.. அவங்கள பத்தி பேசினால் இனி இந்தியன் டாய்லெட்டுக்கு போக வேண்டுமே?. ஏனென்றால் சிறைக்கு நான் சென்றதால் சொல்கிறேன். முக்கால்வாசி பேர் சிறைக்கு போகிறதை கஷ்டம் என்று நினைக்கிறதே, அங்கு வெஸ்டர்ன் டாய்லெட் இல்லாததால் தான். இது மெயின் பிரச்னை. அந்த வலி போனவங்களுக்கு தான் தெரியும். அதுக்கு தான் பயம். எடப்பாடியோட எல்லா பைலையும் கையில் வைச்சிருக்காங்க, அவர் வாய திறந்தால் நிலமை கஷ்டம் தான். பயத்துல தான் எடப்பாடி சுத்திகிட்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு