அண்ணாமலை மீது போலீசில் காங்கிரஸ் எம்எல்ஏ புகார்

குளச்சல்: குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ், இரணியல் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நான் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது வாழ்வில் என்னை அர்ப்பணித்துள்ளேன். நான் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பொது வாழ்வில் இருப்பதால் எனக்கும், காங். கட்சிக்கும் மக்கள் ஆதரவு தருகிறார்கள். கடந்த 17ம் தேதி இரவு வில்லுக்குறியில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் எந்தவித ஆதாரம் இல்லாமல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தரை கைவசப்படுத்திக்கொண்டு பல அரசு பணிகளை முறைகேடாக நடத்தியதாக அவதூறாக பேசி உள்ளார். இது உண்மைக்கு புறம்பானதாகும். எனவே தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இதற்கிடையே பிரின்ஸ் எம்.எல்.ஏ. தனது டிவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை கூறியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? இல்லையேல் அண்ணாமலை பதவி விலக தயாரா? எனவும் கேட்டுள்ளார்.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது