என்னோட படமே இல்லாம வைப்பீங்களா? தலைவரு… பேனர் மேட்டரு… பீல் ஆயிட்டாப்ல… அண்ணாமலையை பங்கம் செய்த பாஜவினர்; கலர் பிரிண்ட் வெச்சதும் கூல் ஆயிட்டாப்ல…

கோவை மாநகர் மாவட்ட பாஜ சார்பில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் நேற்று நடந்தது. இதையொட்டி, பாப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று இரவு பாஜ பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன், ஒன்றிய அமைச்சர்கள் ராஜீவ்சந்திரசேகர், எல்.முருகன், பாஜ. அகில இந்திய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோரும் பங்கேற்றனர். முன்னதாக, இவர்களது வருகையையொட்டி, மாநகர் மாவட்ட பாஜ சார்பில், மாநகரின் முக்கிய பகுதிகளில் வரவேற்பு வளைவு அலங்காரம் வைக்கப்பட்டிருந்தது. இதில், மேற்கண்ட தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அண்ணாமலையின் படம் இல்லை.

இதை, நடைபயணத்தின்போது கவனித்த அண்ணாமலை, ‘‘அட… என்னப்பா… என்னை மறந்துட்டீங்களே… நான்நான் நடைபயணம் மேற்கொள்கிறேன், எனது படத்தையே வைக்கவில்லையே…’’ என கடிந்து கொண்டார். இதையடுத்து, மாநகர் மாவட்ட பாஜ. தலைவர் ரமேஷ் உத்தரவின்பேரில், பாஜ நிர்வாகிகள் அவசரம், அவசரமாக, அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில், கலர் பிரிண்ட் எடுத்து, அண்ணாமலை போட்டோவை ஒட்டிவைத்தனர். இதன்பிறகே, அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார். முன்னதாக, பாஜ பொதுக்கூட்டத்துக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக, ஆண்கள், பெண்கள் பங்கேற்ற குத்தாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இளம்பெண்கள் நடனம் ஆடுவதை பார்க்க, பாஜ தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விட்ட ஜொல் அக்கம் பக்கத்தினரை நகைப்புக்கு உள்ளாக்கியது.

* 6 மாதமாக திரிஷாவை தப்பா பேசுறாங்க..
கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், “எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகி இருக்கிறார். இவருக்கு வழங்கிய பதவி மேலும் தமிழ்நாட்டில் பாஜவை வலுப்படுத்தும். எல்.முருகன் நீலகிரியில் கட்சியின் கட்டளைக்கு ஏற்ப கட்சி பணியாற்றுவார். கட்சி என்ன கட்டளையிட்டாலும் முருகன் பணியாற்றுவார். தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷா குறித்து இரண்டு மூன்று நபர்கள் கடந்த 6 மாதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இது கண்டிக்கத்தக்கது. திரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு