சென்னை: சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குறித்து கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.