வரலாறே இல்லாதவர்கள் வரலாற்றை பற்றி பேசக்கூடாது: அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை

சென்னை: வரலாறே இல்லாதவர்கள் வரலாற்றை பற்றி பேசக்கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்திருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர் குறித்து தொடர்ந்து விமரசனம் செய்து வந்த நிலையில் அதிமுக., பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு ஆர்.பி உதயகுமார் அளித்த பதிலில்; வரலாற்றை, வரலாறு தெரியாதவர் பேசி வருகிறார். கட்சிக்கு தலைமை வகிப்பவர்களுக்கு பொறுமை, கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கட்சியின் தேசிய தலைவர் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு தே.ஜ., கூட்டணியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த குறையாடும் வந்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்று பட்டியலில் இடம்பெறாது, வரலாறே இல்லாதவர்கள் வரலாற்றைப் பற்றி பேசும்போது தான் சர்ச்னச ஏற்படுகிறது. வரலாற்றை எல்லாரும் படித்திருப்பார்கள். தேவையானதை மட்டும் படித்து தேவையானதை மட்டுமே சொல்வார்கள். எனவே தேலையில்லாத வரலாறுகளை வரலாறு இல்லாதவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக முன்னான் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!