அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவில் இருந்தால் அக்கட்சி தோற்கத்தான் செய்யும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவில் இருந்தால் அக்கட்சி தோற்கத்தான் செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார் என்றும் கூறினார். பின்னர் சேலம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் அவர் கூறியதாவது,

8 முறை தமிழ்நாட்டுக்கு மோடி வந்தும் பாஜக வெற்றி பெறவில்லை

பிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்துள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தார்கள் இருந்தும் பாஜக வெற்றி பெறவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 90% இடங்களில் உதயநிதி பிரச்சாரம் செய்தார்

திமுகவுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாட்டின் 90% பகுதிகளுக்கு சென்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

பாஜக வாக்கு அதிகரித்தது என்பது தவறானது

பாஜக ஏதோ வளர்ந்துவிட்டதுபோல செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகிறது. 2014-ல் பாஜக கூட்டணி 18.8% வாக்குகள் பெற்றது, தற்போது 18.2% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துவிட்டதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலை பொறுத்தவரை அதிமுகவின் வாக்கு சதவீதம் மட்டுமேஉயர்ந்துள்ளது. அதிமுகவின் வாக்குகள் மாறிவிட்டது என்கிறார்கள்; எங்கள் கட்சியின் வாக்கு எங்கும் செல்லவில்லை. தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெறும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நான் மட்டுமே பிரச்சாரம் செய்தேன்

அதிமுகவை பொறுத்தவரை நான் ஒருவர் மட்டுமே எல்லா இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தேன்.

அதிமுகவுக்கு 1% கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ளன

2019 தேர்தலை விட தற்போதைய தேர்தலில் அதிமுகவுக்கு 1% வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது; இது மிகப்பெரிய வெற்றி

தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெறும்

அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது பற்றிய கேள்விக்கு தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெறும் என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி கருத்தை ஏற்க எடப்பாடி மறுப்பு

பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் அதிமுக வென்றிருக்கும் என்ற எஸ்.பி.வேலுமணி பேச்சுக்கு எடப்பாடி மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தலில் இருந்திருந்தால், வந்திருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை. சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றதால்தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்

 

Related posts

உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!