அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சி கோயில்களில் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, காஞசிபுரம் ஏகாம்பரநாதர், வரதராஜபெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார்.
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து கோயில் வளாகங்களில் நேற்று நடைபெற்றது. இதில், ஏகாம்பரநாதர் கோயில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, சீனிவாசன், தியாகராஜன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யாசுகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ஜெகநாதன் வசந்தி சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு