இன்று அண்ணா நினைவு நாள் கோயில்களில் பொது விருந்து: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் 32 கோயில்களில் சிறப்பு வழிபாடும் பொது விருந்தும் இன்று நடைபெற உள்ளது.  பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, இன்று காலை 11:30 மணி அளவில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மண்டலங்களை சேர்ந்த 32 கோயில்களில் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தை நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

* அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கோயில்கள்

1. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் – அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு.
2. மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில் – அமைச்சர் ஐ.பெரிய சாமி.
3. திருவான்மியூர் மருதீசுவரர் கோயில் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
4. பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயில் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
5. சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயில் – அமைச்சர் ரகுபதி.
6. மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில் – அமைச்சர் ராமசந்திரன்.
7. திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் – அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
8. சைதாபேட்டை காரணீஸ்வரர் கோயில் – அமைச்சர் மா.சுப்ரமணியன்.
9. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
10. பூங்கா நகர் முத்துக் குமாரசாமி கோயில் – மேயர் பிரியா ராஜன்.
11. அரண்மனைக்காரத் தெரு கச்சாலீசுவரர் கோயில் – துணை மேயர் மகேஷ் குமார்.
12. வடபழநி முருகன் கோயில் – அரசு தலைமை கொறடா செழியன்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு