இன்னும் நீ இருக்கிறாய் அண்ணா!: லட்சியம் வாழ்ந்தால் அந்த மனிதன் வாழ்கிறான் என்று பொருள்.. கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை: இருமொழிக்கொள்கை இறந்துபடவில்லை; மாநில சுயாட்சிக்கான காரணங்கள் இன்னும் காலமாகிவிடவில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தலத்தில் வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில்,

இருமொழிக்கொள்கை
இறந்துபடவில்லை

மாநில சுயாட்சிக்கான
காரணங்கள் இன்னும்
காலமாகிவிடவில்லை

பகுத்தறிவின் வேர்கள்
பட்டுவிடவில்லை
இனமானக் கோட்டை
இற்றுவிடவில்லை
சமூக நீதிக்கொள்கை
அற்றுவிடவில்லை

மதவாத எதிர்ப்பு
மாண்டுவிடவில்லை

எப்படி நீமட்டும்
இறந்துபடுவாய் அண்ணா?

நிழல் விழுந்தால்
பொருள் இருக்கிறது
என்று பொருள்

லட்சியம் வாழ்ந்தால்
அந்த மனிதன் வாழ்கிறான்
என்று பொருள்

இன்னும் நீ இருக்கிறாய்
அண்ணா!

எங்கள் கொள்கை வணக்கம்

என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Related posts

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது