முத்தமிழறிஞர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு நாள்: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை

சென்னை: கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கலைஞர், அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு