அங்கித் திவாரியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனு: திண்டுக்கல் கோர்ட்டில் விசாரணை தள்ளி வைப்பு

திண்டுக்கல்: அரசு மருத்துவரிடம் ரூ.40 லட்சம் லஞ்ச வாங்கியது தொடர்பாக அங்கித் திவாரியை, காவலில் எடுத்த விசாரணை நடத்த வேண்டுமென, திண்டுக்கல் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வருகிற 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு. இவரிடம் இருந்து மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றார். அப்போது கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசாரர் அங்கித் திவாரியை கைது செய்தனர். தற்போது சிறையில் உள்ள இவரை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். இவர் ஜாமீன் கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அங்கித் திவாரி மீது, அமலாக்கத்துறை சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில், திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதித்துறை நடுவர் விடுப்பில் இருந்ததால், பொறுப்பிலிருந்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் அங்கித்திவாரியை, விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, ஜன. 9ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related posts

கள்ளச்சாராயம், பதுக்கல் மது விற்பனை ஒழித்தல் ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

சாலையில் ரகளை; வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை