இன்று பணி ஓய்வு டீ கடையில் சுருண்டு விழுந்து இன்ஸ்பெக்டர் பலி

ஊட்டி: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை, கருமண் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (60). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், சூரியகுமார் என்ற மகனும் உள்ளனர். தனபால் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள டீக்கடையில் தனபால் டீ குடித்துள்ளார்.

அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனபாலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மாரடைப்பால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் தனபால், இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்