ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஆனி மாத பவுர்ணமி

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஆனி மாதம் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 122வது பவுர்ணமி தரிசனம் நடைபெற்றது. 12 மணியளவில் சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனையுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசி பெற்றனர்.

அதனை தொடர்ந்து, மக்கள் சுபிக்‌ஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். இந்நிகழ்வில், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், மேனாள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிவ.பொன்னம்பலவாணன், சென்னை மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் சமூகத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு