Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Friday, September 5 2025 Epaper LogoEpaper Facebook
Friday, September 5, 2025
search-icon-img
Advertisement

அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 7700 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

சென்னை: அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், ”சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் அங்கன்வாடி பணியாளர், மினி அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் நியமனத்திற்கான திருத்தப்பட்ட / ஒருங்கிணைந்த தகுதி அளவுகோல்கள் 7,783 அங்கன்வாடி பணியாளர் / மினி அங்கன்வாடி பணியாளர் / அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது” அரசாணையின்படி, அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் நிரப்பப்பட உள்ளன. அதாவது எழுத்துத் தேர்வு ஏதுமின்றி, விண்ணப்பதாரர்களிடம் மாவட்ட வாரியாக நேர்முகத்தேர்வு நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3886 அங்கன்வாடி பணியாளர், 305 மினி அங்கன்வாடி பணியாளர், 3592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Related News

மேலும் செய்திகள்