அந்தியூர் அருகே குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் சாலை மறியல்

அந்தியூர் ; ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கரா பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குருநாதபுரம் பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களாக சீரான குடிநீர் கிடைக்கவில்லை.இதனால் அப்பகுதி மக்கள்காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மூலக்கடை பகுதியில் உள்ள அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இது சரி செய்யப் படாமல் இருந்ததால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால், கடந்த 10 நாட்களாக பாதிப்படைந்த குருநாதபுரம் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் குருசாமி பேச்சுவார்த்தை நடத்தினர். குடி நீர் செல்லும் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்: கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்