ஆந்திர மாநில புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்பு

திருமலை: ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஜவகர் காபந்து முதல்வர் ஜெகன்மோகனுக்கு நெருக்கமானவர். புதிய ஆட்சியால் தனக்கு சிக்கல் ஏற்படும் என்று அஞ்சி அவர் விடுப்பில் சென்றார். இந்நிலையில் சந்திரபாபு உத்தரவின்படி வனத் துறை செயலாளராக இருந்த நிரப்குமார் பிரசாத் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று வெலகபுடி மாநிலச் செயலகத்தில் நிரப்குமார் பிரசாத் பொறுப்பேற்று கொண்டார். அதனையடுத்து முதல்வர் அலுவலகத்தில் பணி புரிந்த செயலாளர்கள் பூனம் மாலகொண்டையா, ரேவு முத்தயாலராஜு, நாராயண பாரத் குப்தா ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது