ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பிய நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நடிகை ஸ்ரீரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும், துணை முதல்வர் பவன்கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா மீதும் தேர்தல் நேரத்திலும், தேர்தலுக்கு பிறகும் நடிகை ஸ்ரீரெட்டி அவதூறாக பேசி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகராஜு அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3-வது நகர போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்