ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்; படுதோல்வி அடையும் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்!!

ஹைதராபாத் : ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்க உள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைகிறது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13ம் தேதி நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சியோ, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன.மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளின் தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களில் 150 இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணியும், 25இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.இதன் மூலம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது.இங்கு ஓர் இடத்தில் கூட காங்கிரஸ் முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி