கார்கே, ராகுல் முன்னிலையில் ஆந்திர முதல்வரின் சகோதரி ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்

புதுடெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் தான் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியோடு இணைத்து அறிவிப்பை வெளியிட்டார். அவருக்கு மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ஒய்.எஸ்.ஷர்மிளாவின் ஆதரவாளர் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்று அவர்களும் தங்களை காங்கிரஸ் கட்சியின் இணைத்துக் கொண்டனர். ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திரா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷர்மிளா பேசிய போது,‘‘ஒய்.எஸ்.ஆர்.டி.பி கட்சியை காங்கிரசுடன் இணைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

தெலுங்கு மக்களின் பழம்பெரும் தலைவரான டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, தன் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்தது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்காக தனது உயிரையும் கொடுத்தார். ராகுல் காந்தியை பிரதமராக்க்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அவரது மகளாகிய நான் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாகி உள்ளேன். குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ் ஆகும். ஏனெனில் அது அனைத்து சமூகங்களுக்கும் அயராது சேவை செய்கிறது. இந்தியாவின் அனைத்து பிரிவு மக்களையும் காங்கிரஸ் ஒன்றிணைக்கிறது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலை நிறுத்தியது,

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது