ஆந்திரா, தெலங்கானாவில் விரைவில் தேர்தல் வராகி வாகனத்தில் இன்று பவன் கல்யாண் பிரசாரம்

திருமலை: ஆந்திரா, தெலங்கானாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவை பொருத்த வரையில், மீண்டும் பாஜ, ஜனசேனா கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என உள்ளதால் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண் தனது அரசியல் பயணத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரசார ரதம்’ வராகி எனும் பெயரில் தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் காக்கிநாடாவில் இருந்து தனது அரசியல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக, குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2 நாட்கள் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், பவன் கல்யாண் பங்கேற்று பூஜைகளை மேற்கொண்டார். பவன் கல்யான் பேசுகையில், ‘ஜனசேனா கட்சி எதிர்க்காலத்தில் மிகவும் வலுவான கட்சியாக வளரும். தெலங்கானாவில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. தனித்து தேர்தலுக்கு தயாராகுமாறு தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!

ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!!