ஆந்திர மாநிலம் தலகோணா அருவியில் பாறையின் அடியில் சிக்கி உயிரிழந்த மாணவர் உடல் மீட்பு: நண்பர்கள் வீடியோ எடுப்பதற்காக மாணவர் குதித்த போது பரிதாபம்

ஆந்திரா: சென்னையில் தங்கி படித்த கல்லூரி மாணவர் திருப்பதி அருகே அருவியில் குளித்தபோது பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்கள் வீடியோ எடுப்பதற்காக குதித்தபோது இந்த விபரீதம் நேரிட்டது தெரியவந்தது. திருப்பதியை சேர்ந்த மாணவர்கள் சிலர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தங்கி MSC படித்து வருகின்றனர்.

கல்லூரி விடுமுறையில் அவர்கள் திருப்பதி அருகே உள்ள தலகோணா அருவியில் நீராட சென்றனர். இந்நிலையில் சுமந்த் என்ற மாணவர் நண்பர்கள் வீடியோ எடுப்பதற்காக அருவியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது மாணவர் சுமந்த் பாறைகளின் இடுக்கில் சிக்கி கொண்டதாக தெரிகிறது. வெகு நேரம் ஆகியும் சுமந்த் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு சென்ற எரவாளி பாளையம் காவல்துறையினர் மீட்பு குழுவினர் உதவியுடன் பாறையின் இடையில் சிக்கி உயிரிழந்த சுமந்த் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி