ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பேர் கைது: 1250 கிலோ அரிசி, 4 மொபட் பறிமுதல்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிளை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 1250 கிலோ ரேஷன் அரிசி, 4 மொபட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசால் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர் சம்பத் அறிவுறுத்தல்படி, சென்னை வடக்கு காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்று தண்டையார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேப்படும்படி பைக்குகளில் சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (32), சக்திவேல் (29), ஜோசப் (37), வெங்கடேசன் (34), கார்த்திக் (30) என்பதும், தண்டையார்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் தடா பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கும், கள்ள சந்தையிலும் அதிகவிலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவர்களிடமிருந்து 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகளில் இருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 4 மொபட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த திருமலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தண்டை யார்பேட்டை பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்