ஆந்திராவின் துணை முதலமைச்சராக பணிகளை தொடங்கிய பவன் கல்யாண்..!!

அமராவதி: ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைத்து, 4வது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு பதவியேற்றார்.

தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் காரணமாக பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பவன் கல்யாண் தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் துறைகள் குறித்து கேட்டறிந்தார்.

Related posts

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்