ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள வங்ககடலில் மீனவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட தீ: 11 மீனவர்கள் மீட்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள வங்ககடலில் மீனவர்கள் சென்ற படகு தீ பிடித்தது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள பைரவபாலம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் இன்று காலை வழக்கம்போல் படகில் மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென இன்ஜினில் ஏற்பட்ட தீயானது அருகில் இருந்த கேஸ் சிலிண்டர் மீது பட்டதில் சசிலிண்டர் வெடிக்க தொடங்கியது. இதனால் தீ படகு முழுவதும் பரவியது.

இந்நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று படகில் இருந்த 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் படகு முழுவதும் தீ பரவிய நிலையில் படகை விட்டுவிட்டு மீனவர்களை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். தீ பிடித்த படகு முற்றிலும் எரிந்து கடலில் மூழ்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். கடற்படை அதிகாரிகள் சம்பவ நடந்த இடத்தில் இருந்ததால் 11 மீனவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. இல்லையெனில் அவர்களது நிலைமை கேள்விக்குறியாகி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்