ஆந்திராவில் 26 மாவட்டங்களில் அரசு நிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள்: அமைச்சர் நாரா லோகேஷ் குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திராவில் 26 மாவட்டங்களில் அரசு நிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் நாரா லோகேஷ் இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் எண்டாடா கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் 33 ஆண்டுகளுக்கு ஒரு ஏக்கர் ஆயிரம் ரூபாய் என குத்தகைக்கு பெற்று அதில் கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் எந்தவித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

இந்தநிலையில் ஆந்திர மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது டிவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில் ஜெகன் ‘ஆந்திரா மாநிலம் உங்க தாத்தா ராஜா ரெட்டிக்கு சொந்தமானதா? 26 மாவட்டங்களில் 42 ஏக்கருக்கு மேல் 33 வருடங்களுக்கு என பெயரளவுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைக்கு ஒதுக்கியுள்ளீர்கள். மக்களிடம் இருந்து திருடப்பட்ட 500 கோடியில் அரண்மனை கட்டுகிறீர்கள். ₹600 கோடி மதிப்புள்ள நீங்கள் பெற்ற 42 ஏக்கரில் 4,200 ஏழைகளுக்கு ஒரு செண்ட் மனைகள் வழங்கலாம். நீங்கள் மட்டும் உங்கள் நில பேராசையால் உங்களின் ஆடம்பர அரண்மனைகள் கட்ட செலவழித்த ₹500 கோடியில் 25,000 ஏழைகளுக்கு வீடு கட்டித் தரலாம். இந்த அரண்மனைகளின் பைத்தியக்காரத்தனம் என்ன? உங்கள் பணத் தாகத்திற்கு முடிவே இல்லையா? என அமைச்சர் நாரா லோகேஷ் பதிவு செய்துள்ளார்.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி