ஆந்திர தேர்தலில் தோல்வி ஜெகன்மோகனை பார்த்து கதறி அழுத தொண்டர்கள்

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன்ரெட்டி, 3 நாள் பயணமாக தனது சொந்த ஊரான புலிவெந்துலாவுக்கு நேற்று முன்தினம் சென்றார். கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து கடப்பா சென்ற அவருக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

பின்னர் சாலை மார்க்கமாக புலிவேந்துலாவுக்கு சென்றார். அவரது வருகையை அறிந்த அவரது கட்சியினர் அவரது வீட்டின் முன் திரண்டனர். யாரும் எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத சிலர், ஜெகன்மோகன் வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் ஜெகன்மோகனின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது.
ஜெகன்மோகன் வருவதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. கற்களை வீசியது யார்? என பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே ஜெகன்மோகனின் வீட்டு வாசலில் பல மணி நேரமாக காத்திருந்து பெண்கள் வரவேற்றனர்.

ஜெகன்மோகனை கண்டதும் அவரது கட்சியினர் மற்றும் பெண்கள், `ஆந்திர மக்களுக்காக நலத்திட்டங்களை அள்ளிக்கொடுத்தும் இவ்வளவு மோசமான தோல்வி ஏற்பட்டு விட்டதே’ எனக்கூறி கதறிஅழுதனர். அவர்களை ஜெகன்மோகன் சமாதானம் செய்தார்.

Related posts

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்