அந்தமான் – நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் 6வது முறையாக நிலநடுக்கம்.. கடலுக்கு அடியில் அடுத்தடுத்து ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!!

போர்ட் பிளேர் : அந்தமான் – நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கேம்பெல் என்ற பகுதியின் வடக்கில் நேற்று நண்பகல் 1.15 மணி அளவில் சுமார் 10கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோளில் 4.9 ஆக பதிவானது. தொடர்ந்து பிற்பகல் 2.59 மணி அளவில் நிகோபார் தீவு அருகே சுமார் 10கிமீ ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 4.1 ஆக பதிவானது. 3வது முறையாக ரிக்டர் அளவுக்கோலில் 5.3 என்ற அளவிலும் 4வது முறையாக 5.5 என்ற அளவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து 5வது முறையாக அதிகாலை 1.07 மணிக்கு அந்தமானில் திக்லிபூரில் இருந்து 34 கிமீ தொலைவில் 15 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் 3.9 ஆக பதிவாகியது. இந்த நிலையில் 6வது முறையாக அதிகாலை 2.26 மணிக்கு கேம்பெல் பே என்ற இடத்தில் இருந்து 220 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.6 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. வங்கக்கடலுக்கு அடியில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு இல்லை என்று புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் சற்று அச்சம் அடைந்தனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை