அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேர் பெயரை மாற்றினார் அமித் ஷா: இனிமேல் ஸ்ரீ விஜயபுரம் என்று அழைக்கப்படும்

புதுடெல்லி: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை இனிமேல் ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றப்போவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: காலனித்துவ முத்திரையிலிருந்து தேசத்தை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் போர்ட் பிளேரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம்.

ஸ்ரீ விஜய புரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அதில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது. ஏனெனில் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையில்லாத இடம் உள்ளது. சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக இருந்த தீவுப் பகுதி இப்போது இந்தியாவின் வளர்ச்சி தளமாக மாறி உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போசால் நமது மூவர்ணக்கொடி முதல்முறையாக பறக்க விடப்பட்ட இடமும், வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடியபோது சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இடமும் இதுதான் என்றார்.

Related posts

திரிணாமுல் எம்பி ராஜினாமா

பீகாரில் 21 குடிசைகள் தீ வைத்து எரிப்பு 15 பேர் கைது

ஐக்கிய ஜனதா தள மாஜி எம்எல்சி வீட்டில் என்ஐஏ சோதனை