6 ஆண்டுகளைக் கடந்த அரசு பஸ்களை அகற்ற அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தேனி நகரத்திற்கு புறப்பட்ட அரசுப் பேருந்து, அடுத்த சில நிமிடங்களில் பிரேக் பிடிக்காமல் சாலையோரத்தில் இருந்த இனிப்புக் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. அரசுப் பேருந்துகளின் நிலைமை நாளுக்கு நாள் கவலையளிப்பதாக உள்ளது.

இதை உணர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பழைய பேருந்துகள் அனைத்தையும் பழுது பார்க்க வேண்டும். மேலும் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றி அவற்றுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு