கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு:அன்புமணி, ஜி.கே.வாசன் பேட்டி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், பெரியாறு அணைக்கு நிகராக புதிய அணையை கட்டுவோம் என கேரளாவில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதும் கண்டிக்கத்தக்கது. வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு தெரிவித்தார். ‘விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா’ என்ற கேள்விக்கு, ‘இன்னும் கல்யாணமே ஆகவில்லை. அதுக்குள்ள குழந்தைக்கு பேர் வைக்க சொல்கிறீர்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங்கள்’ என்றார்.

ஈரோட்டில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமாகா சரியான நேரத்தில் காலம் தாழ்த்தாமல் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். பிப்ரவரி மாதம் செயற்குழு கூட்டம் நடக்கும். இதில் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கூட்டணி அமையும். ஜனநாயக நாட்டில் நடிகர் விஜய், அரசியலுக்கு வர தடை இல்லை. தமிழகத்தில் பாஜ கூட்டணியை மத்திய பாஜவினர்தான் முடிவு செய்வர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்