அனகாபுத்தூரில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க கோரி 3ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில், அனகாபுத்தூர் நகராட்சியாக இருந்தபோது ரூ.78 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது இப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாத காலமாக இப்பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் தோண்டப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூருக்கு செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்காததை கண்டித்தும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்தும், அனகாபுத்தூர் பகுதி அதிமுக சார்பில், வரும் 3ம் தேதி காலை 10 மணிக்கு, அனகாபுத்தூர் நூலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தொடர்ந்து 4வது முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்: புதிய நியமனம் வரை கவர்னராக நீடிப்பாரா?

தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்