வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இங்குள்ள மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு குட்டிகளை ஈன்றுள்ளாது. இதை கண்டுகளிப்பதற்காக பார்வையாளர்கள் அதிகளவில் குவிகின்றனர். இதுகுறித்து பூங்கா அதிகாரி கூறுகையில், ‘‘பூங்காவில் உள்ள அனகோண்டா பாப்பு 8 மஞ்சள் நிற குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்த பாம்பு குட்டிகள் பாறைகளில் ஏறி சருக்கி செல்வதை சிறுவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது. இதில், கடந்த 2020ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் சென்னை அடுத்த நெம்மேலியில் உள்ள முதலை பண்னையில் இருந்து அனகோண்டா பாம்பு ஜோடி பெறப்பட்டது.

தற்போது நல்ல நிலையில் உள்ள அனகோண்டா பாம்பு குட்டிகளை பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக விட்டுள்ளோம். இதற்கு சிறிய கோழிக்குஞ்சுகள், எலிகள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. அடைகாத்து வரும் நெருப்பு கோழிகள் ஒரிரு நாட்களுக்குள் குஞ்சு பொரிப்பதற்கான இயற்கை சூழ்நிலைகளை உருவாகி உள்ளோம்,’’ என்றார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை