அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு: அன்னதான திட்டத்திற்கு ரூ105 கோடி செலவு

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திரு.வி.க. நகர் எம்எல்ஏ பி.தாயகம்கவி பேசுகையில், ‘தமிழ்நாட்டில் எத்தனை கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது’ என்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் 10 கோயில்களில் செயல்படுத்த உத்தரவிட்டு 764 கோயிலில் இன்றைக்கு அன்னதானத் திட்டம் செயல்பட்டு வருகிறது. நாள் முழுவதும் அன்னதான திட்டம் என்பது கடந்த காலங்களில் பழனி மற்றும் ரங்கம் ஆகிய 2 கோயில்களில் மட்டும் இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக 6 கோயில்களுக்கு நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி 8 கோயில்களில் அன்னதான திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 82 ஆயிரம் பக்தர்கள் பயனடைகிறார்கள். மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் பழனியில் அன்னதானம், நெல்லையப்பர் கோயிலில் விசேஷ காலங்களில் 31 நாட்களில் அன்னதானம் என்று ரூ105 கோடி செலவாகிறது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!