4 நாட்கள் தொடர் சிகிச்சை: உடல் நலம் தேறியதால் காட்டுக்கு திரும்பிய யானை

கோவை: கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் கடந்த 30ம் தேதி வனப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றும், 3 மாத குட்டியுடன் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், 40 வயது பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே படுத்து இருந்தது.

இதையடுத்து, வனத்துறையின் கால்நடை மருத்துவ குழுவினர் உடல் நலம் பாதித்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது தாய் யானையை பிரியாமல் குட்டி யானை அதன் அருகிலேயே இருந்தது. மேலும், நிற்க முடியாமல் இருந்த யானையை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது யானை சுறுசுறுப்பாக இருந்தது. அதற்கு மசாலா புல், ஆலை இலை, அரச இலை, பழங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உடல்நலம் நன்று தெரிய நிலையில் பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய பெண் யானை தற்போது வனப்பகுதிக்குள் விடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. பெண் யானையை வனத்துறையினர் டிரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை