காவிரியில் தண்ணீர் திறப்பு விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்யும்படி மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கடந்த திங்கட்கிழமையே வழக்கு தொடரப்பட்டு விட்டது. ஆனால், அதன்பின் 5 நாட்களாகியும் அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

காவிரியில் கூடுதல் தண்ணீர் பெறுவதில் செய்யப்படும் தாமதம் காவிரி படுகை உழவர்களுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, உச்சநீதிமன்றத்தின் உரிய அமர்வில் முறையீடு செய்து கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, அதுபற்றி விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளது. காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அனைத்து சதிகளையும் தமிழ்நாடு முறியடித்தாக வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்