அம்ரித்பால், ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் நாடாளுமன்றம் செல்ல நீதிமன்ற அனுமதி தேவை!

டெல்லி: சிறையில் இருந்தபடியே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அம்ரித்பால், ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை பெற்றால்தான் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க முடியும் என கூறப்படுகிறது. அவர்களை சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ்த்திலான அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். மேலும் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்