அமோனியா வாயு கசிவை ஏற்படுத்திய எண்ணூர் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கந்தவர்வகோட்டை தொகுதி உறுப்பினர் சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது: பேரிடருக்கு ஒன்றிய அரசு ரூ.37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டுமென வற்புறுத்தியும், ஒரு பைசாகூட இதுவரை வழங்காத இந்தப் பின்னணியில் தமிழக மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பெரும் நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்கது. சென்னை, எண்ணூர் பகுதியில் 33 கிராமங்களில் 70,000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 26ம்தேதி அங்கு அம்மோனியா வாயு கசிவைத் தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் அமோனியா மற்றும் கந்தக அமிலம், பார்பாரிக் அமிலம், சல்பேட், ஜிப்சம் ஆகிய ரசாயனங்கள் இருப்பது ஆபத்து நிறைந்ததாக உள்ளது. எனவே கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும். கந்தர்வகோட்டை பகுதி மக்கள் நீர் ஆதாரம் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, ஒரு புதிய ஆற்றுப்படுகை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

5,000 ஊழியர்களுக்கு பணி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000-கோடி முதலீடு

நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை