3 ஆண்டுகளுக்கு பிறகு நிர்வாகிகள் கூட்டம்.. அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியதா அமமுக? : தேனி அரசியலில் பரபரப்பு!!

தேனி : தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் அதிமுக அலுவலகத்தை அமமுக கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி ஆர்.எம்.டி.சி. காலனி அருகே அதிமுக அலுவலகம் அமைந்துள்ளது. தரைத்தளம், முதல் தளம் கொண்ட அதிமுக அலுவலகத்தில் 700 பேருக்கு மேல் அமரக் கூடிய வசதி உள்ளது. அதிமுகவுக்குள் பிளவுகள் ஏற்பட்ட பிறகு, சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூட்டங்களை நடத்துவோம் எனக் கூறியதால் யாரும் செல்லக் கூடாது என காவல்துறையினர் தடை விதித்தனர். மேலும் கட்டடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. நடத்திய விசாரணையில் முறையான எந்த ஆவணத்தையும் அதிமுக சமர்ப்பிக்கவில்லை.

இந்த நிலையில் 3 ஆண்டுகள் கூட்டம் நடத்தப்படாமல் இருந்த இந்த அதிமுக அலுவலகத்தில் இன்று அமமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்பட்ட கட்டடத்தில் அமமுக கூட்டம் நடத்தப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். காவலாளிக்கான ஊதியம், அலுவலக மின்கட்டணத்தை ஓ.பன்னீர்செல்வம் செலுத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தேனி மாவட்ட அதிமுக அலுவலகத்தை தாங்களே பராமரித்து வருவதாக அமமுகவினர் தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது அதிமுக, ஓ.பி.எஸ். அணியினர் யாரும் செல்லாத நிலையில் அமமுகவினர் கூட்டம் நடத்தியதால் அதிமுக அலுவலகம் அமமுக வசம் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது