அம்மா உணவகங்கள் நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் அம்மா உணவகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகையில் செய்திகள் வந்தன. ஆனால், தற்போதைய அம்மா உணவகங்களைப் பார்க்கும்போது, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், 2021ம் ஆண்டிற்கு முன்பே இதுபோன்ற நிலைமை நிலவுவதாகவும், இதுகுறித்து அறிக்கை பெறப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறுகின்றனர். ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொருள் பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி அவை நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சூழல் சரியில்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் நேரடியாக வர வேண்டாம்: கேரள முதல்வர் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்