அம்மா உணவகத்திற்கு எடப்பாடி எந்த நிதியும் ஒதுக்கவில்லை: புகழேந்தி

ஓசூர்: ஓசூரில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு பெங்களூரு புகழேந்தி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் காலை சிற்றுண்டியை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று, அம்மா உணவகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளார். இதனை பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கிறோம். எங்களை பொருத்தவரை, நல்லவைகளை செய்யும்போது பாராட்டுகிறோம்.

அம்மா உணவகத்திற்கு, 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. ஆட்சியில் இருந்தார், போனார், உணவு பொருட்களில் ஊழல் செய்தார் என வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு மன்றத்தில் உள்ளது. இதுதான் அவரது சாதனை. பிரதமரின் நாற்காலி ஆட்டத்தில் உள்ளது. அது நிரந்தரமான நாற்காலியாக இல்லை. ஒன்றிய மத்திய அரசின் ஆட்சி நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் கையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும், அந்த நாற்காலியை அவர்கள் தள்ளி விடுவார்கள். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை