அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு விமான நிலையம் இன்று முற்றுகை: தமிழக காங். எஸ்.சி அணி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்சி அணி தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏறக்குறைய நூறு நாட்களுக்கும் மேலாக மணிபூர் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இன மோதல்களை தொடர்ந்து, பழங்குடியின பெண்களை நிர்வாணபடுத்தி வீதிகளில் ஊர்வலம் அழைத்து சென்றது ஒட்டுமொத்த மனித குலத்தையே நிலைகுலைய வைக்கும் நிகழ்வுகள் அரங்கேறி கொண்டிருக்கிறது. வன்முறையை கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட வேண்டியது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பொறுப்பு, கடமை. ஆனால் அவ்வாறு எதுவும் செய்யாமல் உலகையே அதிர்ச்சி அடைய செய்த சம்பவத்தை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்த வேளையில் ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற முறையில் அதை எல்லாம் கவனிக்காமல் தன் கட்சியின் வாக்கு அரசியலுக்காக ராமநாதபுரம் செல்ல மதுரை விமானம் நிலையத்திற்கு அமித்ஷா இன்று வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை சார்பாக மாநிலம் முழுவதும் கட்சியினரை ஒருங்கிணைத்து, விமான நிலையத்திலேயே முற்றுகை இட உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது