அமெரிக்க பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி, அமெரிக்காவுக்கு அரசுமுறை முதலீட்டு ஈர்ப்பு பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் 29-ம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர், பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்துக் கலந்துரையாடினார்.

அதைத் தொடர்ந்து இந்த மாதம் 2-ம் தேதி சிகாகோவுக்குச் சென்றவர், ஏராளமான தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல, அமெரிக்க வாழ் தமிழர்கள், சங்கங்கள் மற்றும் அமைப்பினரைச் சந்தித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அமெரிக்கப் பயணத்தில், 7,616 கோடி ரூபாய் அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தங்கள் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் ஏற்படும்

இந்த நிலையில், தனது 17 நாள்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் இன்று (14-09-2024) சென்னை திரும்பினார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக-வினர் சார்பிலும் பலத்த வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்க அரசு முறை பயணம் வெற்றிகரமான, சாதனை பயணமாக அமைந்ததுள்ளது என்று சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்க பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைக்குரிய பயணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருந்த 17 நாட்களும் முக பயனுள்ளதாக இருந்தது. உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினேன்.

அமெரிக்க பயணத்தின் மூலம் 18 நிறுவனங்களுடன் மொத்தம் ரு.7618 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்க பயணம் ஒரு வெற்றிகரமான பயணம் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணம். இந்த பயணம் மிகப்பெரிய பயனுள்ள பயணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு அளித்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு FORD நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் இன்னும் பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறினார். இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி விவகாரத்தில் நிர்மலா சீதாராமனின் செயல் வெட்கப்பட வேண்டியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறித்து தொழிலதிபர் நியாயமான கோரிக்கையை முன்வைத்தார். ஜிஎஸ்டி விவகாரத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றபோது 10% முதலீடுகளைகூட ஈர்க்கவில்லை. 100-க்கு 100 நிறைவேற்றக் கூடிய வகையில்தான் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் பற்றி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். 3 ஆண்டு முதலீடுகள் குறித்த விளக்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி படித்துப் பார்க்க வேண்டும்.

 

 

Related posts

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது