அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு அமோக வரவேற்பு: கருத்து கணிப்பு முடிவால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கவலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர். அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்பை, ஜோ பைடன் எதிர்கொள்வார் என்ற நிலை மாறி அவரே துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அங்கீகரித்தார்.

அவரது கட்சியும் முழு ஆதரவு அளித்து கமலா ஹரிஷை அதிபர் வேட்பாளராக அறிவித்து அதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கமலா ஹாரிஸ் தேர்தலை சந்திப்பதற்கான தேர்தல் நிதியும் பெருமளவு திரண்டு இருப்பது அவருக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. ஜே பைடன் தேர்தல் வேட்பாளராக இருந்தவரை டொனால்ட் ட்ரம்ப்-க்கு இருந்த மக்களின் ஆதரவு நிலைப்பாடு தற்போது சரிய தொடங்கி இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கருத்துக்கணிப்பு முடிவில் மக்கள் ஆதரவில் கமலா ஹாரிஸ் 49 சதவீதமும், டொனால்ட் ட்ரம்ப் 47 சதவிகிதமாக பதிவாகி இருக்கிறது. மற்றொரு முன்னணி பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் கருத்து கணிப்பு முடிவில் ஜோ பைடன், கறுப்பின வாக்காளர்களில் 59 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவார் என தெரிவித்து இருந்தது. தற்போது அதிபர் வேட்பாளர் மாற்றத்திற்கு பிறகு கமலா ஹாரிஸ் 69 சதவீத வாக்குகளை பெறுவார் என கணித்துள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் வாக்கு சதவீதம் சரிவை நோக்கி நகர்வதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது