அமெரிக்காவில் ஆகஸ்டில் வன்முறை நடக்கும்; டிரம்ப் தான் அடுத்த அதிபர்: பிரபல ஜோதிடர் எமி ட்ரிப் கணிப்பு

வாஷிங்டன்: டிரம்ப் தான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று பிரபல ஜோதிடர் எமி ட்ரிம் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசுக்கும், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிரபல ஜோதிடர் எமி ட்ரிப் என்பவர் வெளியிட்ட பதிவில், ‘டிரம்ப்பின் ஜோதிடக் கணக்குப்படி, அவரது தொழில் மற்றும் இலக்குகளில் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது.

இருப்பினும், அவருக்கு சில புதுவிதமான நிகழ்வுகள் நிகழக்கூடும். டிரம்ப் தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஆவார். அமெரிக்க அரசியலில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி, கமலா ஹாரிசின் ஜனநாயகக் கட்சி சிகாகோவில் தேசிய மாநாடு சிகாகோவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக எமி ட்ரிப், தற்போதைய ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணித்திருந்தார்; அதுமட்டுமின்றி, கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த 2020ம் ஆண்டில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி

மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு: 2 நாள் விசாரணை முடிந்தது