அமெரிக்காவில் அந்தரத்தில் திடீரென நின்ற ரோலர் கோஸ்டர்.. சிக்கிக்கொண்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!!

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணம் ஃபாரஸ்ட் கவுண்டியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக் கொண்டிருந்த ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றது. இதனால் அதில் பயணம் செய்த 8 பேர் சில மணி நேரங்கள் தலைகீழாக அந்தரத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரையிலிருந்து 100 அடி உயரத்திற்கு மேல் ரோலர் கோஸ்டர் நின்றதால், அதற்கேற்ப சாதனங்களை கொண்டுவந்து மீட்பு நடவடிக்கைகளை தொடங்க 2 மணி நேரங்கள் ஆகின. 3 நகரங்களை சேர்ந்த தீ அணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரோலர் கோஸ்டரில் சிக்கிக்கொண்ட அனைவரும் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!!

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடியின் புகைப்படங்கள்..!!

பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்