நிலவுக்கு சென்ற அமெரிக்காவின் லேண்டர் செயல்பாட்டை நிறுத்தியது

கேப் கேனாவெரல்: அமெரிக்காவில் இன்ட்யுடிவ் மெஷின்ஸ் என்ற நிறுவனம் ஒடிசியஸ் என்ற தனியார் விண்கலத்தை கடந்த 22ம் தேதி நிலவுக்கு அனுப்பியது. இது நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. எனினும் இது தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் சாய்வாக தரையிறங்கியதாகவும் லேண்டரின் கால்கள் உடைந்ததாகவும் கூறப்பட்டது.

எதிர்பார்த்ததைவிடவும் ஒடிசியஸின் சூரிய சக்தி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை நீண்ட நாட்கள் நீடித்தது. இதனை தொடர்ந்து நேற்று செயல்பாட்டை நிறுத்தியது. கடும் குளிரிலும் லேண்டர் செயலிழக்காமல் இருந்தால் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று நம்பப்படுகின்றது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா