அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லை இந்தியாவை சேர்ந்த வசுலூன்: ம.பி. கல்வி அமைச்சர் பேச்சு

போபால்: மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பார்மர் கலந்து கொண்டு பேசியதாவது, ‘‘கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார். இந்திய மாணவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்றால் கொலம்பசுக்கு பிந்தைய காலத்தில் மக்கள் எவ்வாறு பழங்குடியினரின் இருப்பிடங்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தை சித்ரவதை செய்தார்கள் என்பதை கற்பித்திருக்க வேண்டும்.

ஏனென்றால் அந்த சமூகத்தினர் இயற்கையை வணங்குபவர்கள் மற்றும் சூரியனை வணங்குபவர்கள். அவர்கள் எப்படி கொல்லப்பட்டனர். அவர்கள் எப்படி மாற்றப்பட்டனர் என்பதை தெரியப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக சரியான உண்மைகள் கற்பிக்கப்படவில்லை. 8ம் நூற்றாண்டில் இந்தியாவின் மாவீரன் வசுலூன் அமெரிக்காவிற்கு சென்று அங்கு பல கோயில்களை கட்டினார் என்று எழுதியிருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். இந்த உண்மைகள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் எழுதப்பட்டுள்ளன. இந்த உண்மைகள் அங்குள்ள நூலகத்தில் இன்றும் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை கண்டுபிடித்தது எங்களது இந்திய மூதாதையர்கள். கொலம்பஸ் அல்ல என்பதை மாணவர்களுக்கு சரியாக கற்பித்திருக்க வேண்டும்” என்றார்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்